இந்த வருடம் ஒய்வு பெறும் முதல் இந்திய கிலோ நீர்மூழ்கி !!

  • Tamil Defense
  • April 23, 2021
  • Comments Off on இந்த வருடம் ஒய்வு பெறும் முதல் இந்திய கிலோ நீர்மூழ்கி !!

இந்த வருடம் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் என்கிற கீலோ ரக நீர்மூழ்கி கப்பல் படையில் இருந்து ஒய்வு பெற உள்ளது, இதற்கான விழா மும்பையில் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு துறையின் ஒப்புதலுக்காக இந்திய கடற்படை இரண்டு மாதங்களுக்கு இந்த நிகழ்வை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு இந்திய கடற்படையின் கடலடி போர்முறையில் பல ஆண்டு காலமாக முக்கிய பங்கு வகித்த நீர்மூழ்கி ரகம் ஒய்வு பெறுவதை முன்குறிக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்த கப்பல் ஒய்வு பெறும் போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் எண்ணிக்கை 14 ஆக குறையும் அவற்றில் 7 இந்த கீலோ ரக நீர்மூழ்கி கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு சிந்துரக்ஷக் மும்பையில் வெடித்து சிதறியது, கடந்த வருடம் சிந்துவீர் மியான்மர் கடற்படையிடம் ஒப்படைக்கபட்டது.

தற்போது பி75 திட்டத்தின் கீழ் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகள் படையில் இணைந்து வருகின்றன, மேலும் மூன்று கப்பல்கள் படையில் இணைய உள்ளன.

மேலும் இந்திய கடற்படை பி75ஐ திட்டத்தின் கீழ் மேலும் 6 நீர்மூழ்கி கப்பல்களை பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையின் தேவை 24 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பலகளாகும், கடைசியாக 1995 ஆம் ஆண்டு 20 இத்தகைய நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இருந்தன என்பது கூடுதல் தகவல் ஆகும்.