செஷல்ஸ் கடலோர காவல்படைக்கு இந்திய ரோந்து கலன் !!

இந்தியாவின் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் நாட்டு கடலோர காவல்படைக்கு இந்தியா ஒரு ரோந்து கலனை வழங்கி உள்ளது.

இந்த ரோந்து கலன் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள கார்டன் ரீச ஷிப்பில்டர்ஸ் மற்றும் என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கலன் சுமார் 34 நாட் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது, 1500 நாட்டிகல் மைல் இயக்க வரம்பு கொண்டது.

மேலும் இதில் 35 வீரர்கள் பயணிக்க முடியும் கலனில் ஒரு 40/60மிமீ துப்பாக்கி பொருத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த அதிவேக ரோந்து கலனை பிரதமர் மோடி செஷல்ஸ் அதிபர் வாவெல் ராம்கலவான் முன்னிலையில் ஒப்படைத்தார்.

இரு நாட்டை சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இணைய காணொளி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.