ஃபிரான்ஸில் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக அறைகூவல் !!

  • Tamil Defense
  • April 28, 2021
  • Comments Off on ஃபிரான்ஸில் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக அறைகூவல் !!

ஃபிரான்ஸ் நாட்டில் சுமார் இருபது ஒய்வு பெற்ற ஜெனரல்கள் ஃபிரெஞ்சு அதிபர் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வி அடைந்தால் ராணுவ ஆட்சி தேவைப்படும் என அறைகூவல் விடுத்துள்ளனர்.

மேலும் சுமார் 1000க்கும் அதிகமான ராணுவம், ஜென்டர்மாரி மற்றும் காவல்துறை வீரர்கள் முன்னாள் ஜென்டர்மாரி அதிகாரியான ஜீன் பியர்ரே தலைமையில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

அதில் ஃபிரான்ஸ் பேராபத்தில் உள்ளதாகவும், எங்கள் அழகான நாடு அழிவதை எங்களால் பார்த்து கொண்டு இருக்க முடியாது எனவும்,

எங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணாண செயல்களை நாங்கள் ஒய்வு பெற்றாலும் தடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த கடிதத்தில் முதல் கையெழுத்து ஃபிரெஞ்சு தரைப்படையின் முன்னனி சிறப்பு படைப்பிரிவான ஃபிரெஞ்சு ஃபாரீன் லிஜியனுடைய முன்னாள் தளபதியான ஜெனரல் கிறிஸ்டியன் பிக்யெமால் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.