
வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக பல்வேறு அவசர ஆலோசனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சத்திஸ்கரின் DGP DM அஸ்வதி மற்றும் சிறப்பு DG (நக்சல் எதிர்ப்பு ஆபரேசன்) அசோக் சுனிஜா மற்றும் மேலும் சில அதிகாரிகள் ராய்பூரில் அவசர ஆலோசனை நடத்தினர்.
அஸ்ஸாமில் பரப்புரை மேற்கொண்டிருந்த சத்திஸ்கர் முதல்வர் புபேஷ் பாகேல் அவர்கள் தற்போது மாநிலம் திரும்பி சண்டை குறித்து கேட்டறிந்துள்ளார்.மேலும் என்கௌன்டர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் உரையாடியுள்ளார்.
அதே போல உள்துறை அமைச்சர் டெல்லியில் உயர்மட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகிறார்.இந்த சந்திப்பில் சிஆர்பிஎப் சிறப்பு டிஜி சஞ்சய் சந்தர் அவர்களும் பங்கேற்றுள்ளார்.
கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.