போர் கப்பல்களை காக்கும் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம் !!

  • Tamil Defense
  • April 6, 2021
  • Comments Off on போர் கப்பல்களை காக்கும் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம் !!

போர் கப்பல்களை பாதுகாக்க அதிநவீன பாதுகாப்பு அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஜோத்பூர் பாதுகாப்பு ஆய்வகம் குறுந்தூர, இடைத்தூர மற்றும் நீண்டதூர பாதுகாப்பு கருவிகளை உருவாக்கி உள்ளது.

சமீபத்தில் இந்திய கடற்படை அரேபிய கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு கருவிகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.

சாஃப் எனப்படும் இந்த கருவி ராக்கெட் போன்ற அமைப்பானது இந்த போர்க்கப்பல்களை எதிரி நாட்டு ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்கும்.