500 ஆக்சிஜன் பிளான்டுகள் அமைக்க உள்ள டிஆர்டிஓ

  • Tamil Defense
  • April 28, 2021
  • Comments Off on 500 ஆக்சிஜன் பிளான்டுகள் அமைக்க உள்ள டிஆர்டிஓ

தேஜஸ் விமானத்திற்காக இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள On‐Board Oxygen Generation தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 மருத்துவ ஆக்சிஜன் பிளான்டுகளை டிஆர்டிஓ அமைக்க உள்ளது.

இந்த ஆக்சிஜன் பிளான்டுகள் ஒரு நாளைக்கு 195 சிலிண்டர்கள் வரை நிரம்பும் ஆற்றல் கொண்டது.இதற்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ M/s Tata Advanced Systems Limited, Bengaluru மற்றும் M/s Trident Pneumatics Pvt. Ltd., Coimbatore ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

இதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் டிஆர்டிஓ அறிவியலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.