ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு யாருடையை ஆலோசனையும் தேவையில்லை !!

  • Tamil Defense
  • April 10, 2021
  • Comments Off on ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு யாருடையை ஆலோசனையும் தேவையில்லை !!

நேற்று ஜம்முவில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் அவர் பேசுகையில் எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட கூடாது.

நாகரிகம் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய எந்தவொரு நாடும் இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்,

அந்த வகையில் எங்கள் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிட வேண்டாம், அதை சீர்செய்ய எங்களுக்கு திறன் உண்டு என்றார்.