
மத்திய உள்துறை அமைசகத்தின் அறிக்கையின்படி கடந்த 10 வருடங்களில் நக்சல்களால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பற்றிய கட்டுரை இது.
கடந்த 2010ஆம் ஆண்டு சுமார் 2213 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது இதில் 720 பொதுமக்கள், 285 பாதுகாப்பு படை வீரர்கள் மரணமடைந்து உள்ளனர், 172 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2012,2013,2014 ஆகிய.ஆண்டுகளில் 85 பாதுகாப்பு படையினர் கொல்லபட்டு உள்ளனர்.
2015ஆம் ஆண்டு 1089 சம்வங்களில் 171 பொதுமக்கள், 59 பாதுகாப்பு படையினர் மரணமடைந்து உள்ளனர், 89 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2016ஆம் ஆண்டு 1048 சம்பவங்களில் 213 பொதுமக்கள்,65 பாதுகாப்பு படை வீரர்கள் மரணத்தை சந்தித்து உள்ளனர், 222 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு 908 சம்பவங்களில் 188 மக்கள், 75 பாதுகாப்பு படையினர் மரணமடைந்து உள்ளனர், 136 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2018ஆம் ஆண்டு 833 சம்பவங்களில் 173 அப்பாவி மக்கள், 67 பாதுகாப்பு படையினர் மரணத்தை தழுவிய நிலையில் 225 நக்சலைட்டுகள் கொல்லபட்டனர்.
2019ஆம் ஆண்டு 670 தாக்குதல்களில் 150 அப்பாவிகள், 52 பாதுகாப்பு படையினர் மரணமடைந்த நிலையில் 145 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2020ஆம் ஆண்டில் 100க்கும் அதிகமான வீரர்கள், 2021ல் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சக தகவலின்படி கடந்த 2004 முதல் 2019 வரை இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினருக்கு உதவியதாக ஏறத்தாழ 8200 பொதுமக்களை நக்சல்கள் சித்திரவதை செய்து கொன்றுள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.