
தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை முற்றி வரும் நிலையில் தற்போது சீனா தைவானுக்கு அருகே போர்பயற்சி நடத்தி வருகிறது.மேலும் இதுபோன்ற பயிற்சிகள் தொடரும் எனவும் கூறியுள்ளது.
இதனருகே அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்கும் படைக்குழு கடந்த ஏப்ரல் 4 அன்று தென்சீனக்கடலுக்கு ஆபரேசனுக்காக சென்றுள்ளது.சீனா அமெரிக்க உறவுகள் மோசமானதை தொடர்ந்து இரண்டாவது முறையாக போர்க்கப்பல்கள் குழு தென்சீனக் கடல் சென்றுள்ளன.
தைவான் அருகே சீன போர்க்கப்பல்களின் நடமாட்டும் அதிகரித்துள்ளதாக தைவான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
சீன கப்பல் படையின் விமானம் தாங்கி கப்பலான லயோனிங் தலைமையில் சீனக் கப்பல்கள் தைவான் அருகே போர்பயிற்சியில் ஈடுபட்டு வருவதை சீனாவும் கூறியுள்ளது.
மேலும் சீன விமானப்படை தைவானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைந்தும் வருகிறது.