விட்சுன் ரீஃப் பகுதியில் ஒடி ஒளிந்த சீனா காரணம் என்ன ??

  • Tamil Defense
  • April 19, 2021
  • Comments Off on விட்சுன் ரீஃப் பகுதியில் ஒடி ஒளிந்த சீனா காரணம் என்ன ??

மிக நீண்ட நாட்களாக சீனா ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் இருக்கும் ஜூவான் ஃபிலிப்பே ரீஃப் பகுதியில் பிரச்சினை செய்து வந்தது.

தனது கடலோர காவல்படை மற்றும் ஆதரவு குழுக்களை களமிறக்கி அந்த பகுதியை உரிமை கோரியது அதற்கு விட்சுன் ரீஃப் என சீன மொழியிலும் பெயரிட்டது.

இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்குதல் படையணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது,

கூடுதலாக கடந்த 9 வருடங்களில் முதல் முறையாக ஃபிலிப்பைன்ஸ் கடற்படையும் தனது நான்கு அதிநவீன போர்க்கப்பல்களை சீனாவுக்கு எதிராக களமிறக்கியது.

இதையடுத்து சீனா அந்த பகுதியில் இருந்து பின்வாங்கி உள்ளது, உடனடியாக இனி அங்கு பிரச்சினை செய்ய பார்க்காது என்பது மட்டும் உறுதியாகிறது.

மேலும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் வலுவான பதிலடியை சீனா முற்றிலும் எதிர்பார்க்கவில்லை, மூக்கறுபட்ட நிலையில் சீனா உள்ளது.