புதிய ஸ்டெல்த் போர் விமானம் தயாரிக்க சீனா திட்டம் !!

  • Tamil Defense
  • April 2, 2021
  • Comments Off on புதிய ஸ்டெல்த் போர் விமானம் தயாரிக்க சீனா திட்டம் !!

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இரு நாடுகளும் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க போட்டி போட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவை போன்றே அடுத்தடுத்து ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரிக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஷென்யாங் ஏர்க்ராப்ஃட் லிமிடெட் இதற்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி எஃப்.சி-31 என்கிற விமானத்தின் புகைப்படத்துடன் அந்த அறிவிக்கை இருந்தது, ஆகவே அதனை தான் குறிப்பிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதனை விமானந்தாங்கி கப்பல்களிலும் பயன்படுத்தி கொள்ளூம் வகையிலும் வடிவமைகக்லாம் என கூறப்படுகிறது.

இது தவிர பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களையும் உருவாக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.