இந்திய எல்லையோரம் பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை குவித்த சீனா !!

  • Tamil Defense
  • April 22, 2021
  • Comments Off on இந்திய எல்லையோரம் பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை குவித்த சீனா !!

சீனா இந்தியா உடனான இமாலய எல்லையோரம் பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ராணுவம் எல்லையோர பாதுகாப்பை அதிகபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பல்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் மிகவும் அதிநவீனமானவை என கூறப்படுகிறது அதாவது இம்மி பிசகாமல் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன தரைப்படையின் ஆர்ட்டில்லரி ப்ரிகேட் ஒன்று சமீபத்தில் 17,000 அடி உயரத்தில் ராக்கெட் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ராக்கெட்டுகள் 2019ஆம் ஆண்டு படையில் இணைந்தவை எனவும் 300மிமீ சுற்றளவு மற்றும் 100கிமீ தாக்குதல் வரம்பு கொண்டவை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.