
விவேகானந்த் சர்வதேச அமைப்பு நடத்திய கருத்தரங்கில் எதிர்கால போர்முறைக்கு இந்திய ராணுவத்தை நவீனபடுத்துவது பற்றி ஜெனரல் பிபின் ராவத் பேசினார்.
அப்போது அவர் இந்தியா மீது சைபர் தாக்குதல் தொடுக்க சீனாவிடம் ஏராளமான வளங்கள் உள்ளது என கூறினார.
ஆகவே இதனை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகவும் சில மேற்கு நாடுகளின் உதவியும் பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனா சைபர் தாக்குதலில் மிகப்பெரிய அளவில் பலம் வாய்ந்த நாடாக விளங்கும் நிலையில் நாம் குறைந்தபட்சம் தடுப்பதற்காவது தயாராக இந்த நடவடிக்கை உதவும் என்ற அவர்,
தரைப்படை விமானப்படை மற்றும் கடற்படைகள் ஆகியவை தனித்தனியே இத்தகைய பிரிவுகளை கொண்டுள்ள நிலையில் ஒர் ஒருங்கிணைந்த பிரிவு உருவாக்கப்படும் என அவர் பேசினார்.