மேலதிக கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி ரக நீர்மூழ்கிகள் வாங்க வாய்ப்பு !!

  • Tamil Defense
  • April 19, 2021
  • Comments Off on மேலதிக கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி ரக நீர்மூழ்கிகள் வாங்க வாய்ப்பு !!

இந்திய கடற்படை தனது டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி (அதாவது ஸ்கார்பீன் மற்றும் சூப்பர் ஸ்கார்பீன்) ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்க விரும்புகிறது.

இவற்றில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த ஏ.ஐ.பி அமைப்புகள் பொருத்தப்படும்.

தற்போது படையில் இணைந்து வரும் 6 கல்வரி ரக நீர்மூழ்கி கபபல்களும் வருகிற 2032ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை பெறும் என கூறப்படுகிறது.

முதலாவது கப்பலில் இந்த பணிகள் முடிவடைய சுமார் 8-12 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது,

ஏனெனில் கப்பல் திறக்கப்பட்டு வயரிங் மற்றும் ப்ளம்பிங் ஆகியவை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு கடல் சோதனைகள் நடைபெற வேண்டும்.

பின்னர் அடுத்தடுத்த கப்பல்களில் இந்த கப்பல்களுக்கான பணிகள் நடைபெற குறைந்த கால அளவு தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வழக்கமான கல்வரி கப்பல்களில் மூன்றும் சூப்பர் கல்வரி கப்பல்களில் மூன்றுமாக தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.