
இந்தியா ஈரான் நாட்டில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அடுத்த மாதம் சாபஹார் துறைமுகமானது பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடையில் சில காலம் இந்தியா அந்த பணிகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் வேகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதை போலவே சாபஹார் துறைமுகத்தை ஆஃப்கானிஸ்தான் உடன் இணைக்கும் ரயில்பாதையையும் இந்தியா நவீனபடுத்த உள்ளது.
இதன் மூலமாக இந்தியாவால் பாகிஸ்தான் தயவின்றி கடல்மார்க்கமாக ஆஃப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய முடியும்.
இந்தியா சுமார் 500 மில்லியன் டாலர்கள் அளவிலான பணத்தை இந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.