நீண்ட நாட்களுக்கு பின்னர் அசாமில் சுட்டு வீழ்த்தப்பட்ட உல்ஃபா பயங்கரவாதி !!

  • Tamil Defense
  • April 29, 2021
  • Comments Off on நீண்ட நாட்களுக்கு பின்னர் அசாமில் சுட்டு வீழ்த்தப்பட்ட உல்ஃபா பயங்கரவாதி !!

அசாம் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி ஒருவனை இன்று காலை நடந்த என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அசாம் மாநிலத்தின் போங்கய்கான மாவட்டத்தில் த்விபென் சவுத் எனும் அந்த உல்ஃபா மேற்கு பிராந்திய தளபதி சுட்டு கொல்லப்பட்டான்.

அவனது மெய்காவலன் பாதும் ராய் உயிருடன் பிடிக்கப்பட்டான், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை அவனிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

உல்ஃபா இயக்கத்தின் தலைவனான பரேஷ் பருவாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த த்ருஷ்டி ராஜ்கோவா கடந்த நவம்பரில் ராணுவத்திடம் சரணடைந்தான்,

ஆகவே த்ருஷ்டி ராஜ்கோவாவின் இடத்தில் த்விபென் சவுத் நியமிக்கப்பட்டான் அதற்கு அடுத்த சிஷ நாட்களிலேயே அவன் கொல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவனது மரணத்தை அடுத்து உல்ஃபா இயக்கம் நடத்தி நினைத்த பல கடத்தல்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்த ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் ஊழியர்கள் இருவரை உல்ஃபா இயக்கம் கடத்தியது குறிப்பிடத்தக்கது.