
தலைநகர் தில்லியில் சமீபத்தில் சுயசிந்தனை திறன் பற்றிய விமானப்படை மாநாடு ஒன்று நடைபெற்றது அதில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது விமானப்படையில் சுயசிந்தனை திறன் தொழில்நுட்பத்திற்கான தேவைகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார்.
இந்த மாநாடு இணையம் வாயிலாக நடைபெற்றது இதனை ஃபிக்கி அமைப்பின் ஒரு பிரிவு நடத்தியது.
சுயசிந்தனை திறன் தொழில்நுட்பமானது இலக்குகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது, தகவல் பெறுவது மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் பெருமளவில் உதவும்.
இன்றைய காலகட்டத்தில் விமானியால் மிகப்பெரிய அளவிலான தரவுகளை சீர்படுத்த முடியாது.
இதுபோன்ற சூழல்களில் சுயசிந்தனை திறன் பெரிய அளவில் கைகொடுக்கும்.
ஆர்.டி.ஒ.எஸ் மற்றும் ஓடா ஆகிய அமைப்புகள் இதற்கு உதவும் மேலும் அவை சி4ஐ அமைப்பின் மிக முக்கியமான அங்கமாகும்.
மேலும் சுயசிந்தனை திறனானது ஆளில்லா விமானங்கள், பராமரிப்பு, தகவல் தொடர்பு, வான் போர்முறை ஆகியவற்றில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.