கிழக்கு லடாக் மற்றும் சியாச்சின் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட இராணுவ தளபதி நரவனே அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹாட் ஸ்பிரிங்,கோக்ரா,தெஸ்பங் ஆகிய பகுதிகளில் சீனா பின்வாங்க மறுத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் இராணுவ தளபதியின் இந்த பயணம் அமைந்துள்ளது.
இந்த உயர்பனி மலைப்பகுதிகளில் உள்ள வீரர்களிடமும் இராணுவ தளபதி அவர்கள் உரையாடியுள்ளார்.
இராணுவ தளபதியுடன் வடக்கு கட்டளையக தளபதி ஜோசி அவர்கள் மற்றும் லே-யில் உள்ள பயர் அன்ட் பியூரி கோர் படையின் கமாண்டிங் அதிகாரி பிகேஜி மேனன் அவர்களும் வீரர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த Fire and Fury corps தான் லடாக்கின் பாதுகாப்பிற்கு பொறுப்பானது ஆகும்.