ஃபிலிப்பைன்ஸ் தைவான் விவகாரத்தில் சீனாவை எச்சரித்த அமெரிக்கா !!

  • Tamil Defense
  • April 8, 2021
  • Comments Off on ஃபிலிப்பைன்ஸ் தைவான் விவகாரத்தில் சீனாவை எச்சரித்த அமெரிக்கா !!

தைவான் நாட்டு எல்லையில் அடிக்கடி சீனா அத்துமீறி வருவதையடுத்து அமெரிக்கா சீனாவை எச்சரித்து உள்ளது.

புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் ,

ஃபிலிப்பைன்ஸ் மற்றும் தைவானுக்கு எதிரான எந்த ராணுவ நடவடிக்கையும் அமெரிக்காவின் பதிலடியை சந்திக்க நேரிடும் என மிக கடுமையாக எச்சரித்தார்.

மேலும் அவர் பேசுகையில் சீனாவின் அத்துமீற்ல்கள் பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமின்றி;

தைவான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவும் திறனும் பலமும் அமெரிக்காவுக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தைவான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் போர் காலத்தில் உதவி பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.