
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுவதுமாக விலக்குவதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த நேட்டோ படைகளும் செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னதாக விலக்கப்படும் என அதிபர் பைடன் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு அறிவித்தார்.
இதன் பின்னர் அவர் ஆர்லிங்டன் தேசிய நினைவிடம் சென்று ஆஃப்கானிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் பேசும் போது படை விலக்கம் மிகவும் பொறுப்பான முறையில் பொறுமையாக நடைபெறும் எனவும் ஆஃப்கன் போரின் இலக்கு நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தது,
20 வருட போரில் பல்லாயிரம் அமெரிக்க, நேட்டோ மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர், இந்த படைவிலக்கம் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.