1 min read
ரஷ்ய உக்ரைன் பிரச்சினை கருங்கடலுக்கு படைகளை அனுப்புவதை தவிர்த்த அமெரிக்கா !!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
இந்த நேரத்தில் அமெரிக்கா கருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில் அதனை ரத்து செய்து உள்ளது.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பாஸ்பரஸ் ஜலசந்தி வழியாக செல்லவிருந்த கப்பல்கள் இதுவரை வரவில்லை என துருக்கி நாட்டு செய்திகளும் கூறுகின்றன.
அமெரிக்கா துருக்கி இடையிலான ஒப்பந்தத்தின்படி முன்கூட்டியே பாஸ்பரஸ் மற்றும் டார்டன்னல்ஸ் ஜலசந்திகளை கடக்க அமெரிக்கா துருக்கியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் இதுவரை அமெரிக்கா எத்தகைய தகவலையும் துருக்கியிடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.