
நேற்று சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் டார்ரெம் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு வந்த அழைப்பில் ஒரு கோப்ரா கமாண்டோ வீரர் பணய கைதியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அழைத்த நபர் தன்னை ஹித்மா என அடையாளபடுத்தி கொண்டதாகவும் வீரர் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஹித்மாவின் முழுப்பெயர் மாத்வி ஹித்மா ஆகும் முக்கிய நக்சல் தளபதி ஆவார் மேலும் நேற்றைய தாக்குதலுக்கு திட்டம் வகுத்ததும் இந்த நபர் தான் என கூறப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட வீரர் ஜம்முவை சேர்ந்தவர் எனவும் அவரது மனைவி மத்திய உள்துறை அமைச்சரிடம் தனது கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.