நேற்று லட்சத்தீவுகள் அருகே இந்திய கடற்படையின் ரோந்த கப்பலான ஐ.என்.எஸ் சுவர்ணா சந்தேகத்துக்கு இடமான இலங்கை படகை இடைமறித்தது.
பின்னர் படகை சோதனையிட்ட கடற்படையினர் சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் படகு பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்தவர்கள் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதை போல கடந்த மார்ச் 18 ஆம் தேதி சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இந்திய கடலோர காவல்படையால் ஒரு பாக் படகில் இதே பகுதியில் கண்டுபிடிக்கபட்டது.
கடந்த வருடத்தில் இந்திய கடலோர காவல்படை மட்டுமே சுமார் 5200 கோடி மதிப்பிலான 1.6 டன்கள் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போதை பொருட்கள் இந்தியா மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விற்கப்பட்டு அந்த பணம் பயங்கரவாத மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுவது குறிப்பிடத்தக்கது.