
மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் திரு. குல்தீப் சிங் இ.கா.ப அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் சுமார் 700 முதல் 750 நக்சலைட்டுகளுடன் இந்த மோதல் நடைபெற்றதாக கூறினார். தேடுதல் வேட்டை நடத்தி விட்டு திரும்பும் வழியில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
பதுங்கி இருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர தாக்குதல் நடத்திய போதும் வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு 45 நக்சல்களை கொன்றுள்ளனர்.
வேறு எந்தவிதமான உளவு தோல்வியோ எதுவும் நடைபெறவில்லை என அவர் மறுத்துள்ளார்.