புல்வாமா என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

  • Tamil Defense
  • April 3, 2021
  • Comments Off on புல்வாமா என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் காக்போரா பகுதியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் மூன்று தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

வீழ்த்தப்பட்டவர்கள் சுஹைல் நிசார் லோன், யவர் அஹ்மத் வாணி, புல்வாமாவின் க்ரூவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்; மற்றும் புல்வாமாவின் ப்ரிச்சூவைச் சேர்ந்த ஜுனைத் அஹ்மத் நெங்க்ரூ என்ற பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.

இதில் இரு பயங்கரவாதிகள் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தையும் ஒருவன் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தையும் சேர்ந்தவன் ஆவான்.

நேற்றிரவு இராணுவத்தின் 55RR, JK காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்.ஓ.ஜி) மற்றும் 184 பட்டாலியன் சி.ஆர்.பி.எஃப் ஆகியவை காக்போராவின் காட் மொஹாலாவில் ஒரு தேடல் நடவடிக்கையைத் தொடங்கின. சந்தேகத்துக்குரிய வீட்டை படைகள் நெருங்கியதும் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சுடத் தொடங்கினர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.முன்னதாக பயங்கரவாதிகள் சரணடைய வாய்ப்பும் வழங்கப்பட்டது.