20 முதல் 25 நக்சல்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்- சிஆர்பிஎப் டிஐி குல்தீப்

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on 20 முதல் 25 நக்சல்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்- சிஆர்பிஎப் டிஐி குல்தீப்

பிஜப்பூர் என்கௌன்டரில் உளவுத் தகவல் தவறு ஏதும் நடக்கவில்லை என சிஆர்பிஎப் டிஜி குல்தீப் சிங் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் 20-25 நக்சல்கள் கண்டிப்பாக நமது வீரர்களால் வீழ்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் எனினும் உண்மையில் எத்தனை பேர் வீழ்த்தப்பட்டனர் என்ற தகவல் இல்லை என கூறியுள்ளார்.

உளவுத் தகவல்கள் தோல்வி என்றால் படைகள் ஆபரேசனுக்கு சென்றிருக்காது எனவும் நக்சல்களை வீழ்த்தியிருக்க முடியாது எனவும் டிஜி கூறியுள்ளார்.

காயம்பட்ட மற்றும் வீழ்த்தப்பட்ட நக்சல்களை கொண்டு செல்ல நக்சல்கள் மூன்று ட்ராக்டர்களை உபயோகித்துள்ளனர்.