Day: April 23, 2021

ஆம்கா தயாரிப்பு பணியில் இரண்டு தனியார் நிறுவனங்கள் !!

April 23, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் ஒர் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் ஆம்கா விமானத்தின் சோதனை வடிவ தயாரிப்பில் ஈடுபட உள்ளன. ஆம்கா சிறப்பு பயன்பாட்டு வாகன திட்டத்தின் கீழ் வரும், இந்த திட்டத்தின்படி இரண்டு தனியார் நிறுவனங்களும் 25% மற்றும் அரசு 75% நிதி பங்களிப்பை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்கா திட்ட இயக்குனர் ஏ.கே.கோஷ் முதலாவது ஆம்கா சோதனை விமானம் 2024ஆம் ஆண்டு வெளிவந்து […]

Read More

எஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் !!

April 23, 2021

இந்திய விமானப்படை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பின் இணைப்புக்கான கள பணிகளை துவங்கி உள்ளது. நவம்பர் மாதம் முதலாக எஸ்400 அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளது, முதல் எஸ்400 படையணியை ஏப்ரல் 2022 செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. முதலாவது எஸ்400 படையணி தேசிய தலைநகர பகுதிக்கு மேற்கு பகுதியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான இந்திய விமானப்படை வீரர்கள் தற்போது ரஷ்யாவில் எஸ்400 அமைப்பை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர்என்பது […]

Read More

ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை இறக்குமதி செய்ய விமானப்படையை பயன்படுத்த திட்டம் ??

April 23, 2021

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது, மருத்துவமனைகளில ஆக்ஸிஜன் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் இந்திய விமானப்படையை இதற்கு பயன்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், நாட்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் கூறுகின்றன. இந்திய விமானப்படை அதிகாரிகள் பேசும் […]

Read More

மீட்க முடியாத ஆழத்திற்கு இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி போயிருக்கலாம் !!

April 23, 2021

இந்தோனேசிய கடற்படையின் கே.ஆர்.ஐ நங்காலா என்ற நீர்மூழ்கி சில நாட்களுக்கு முன்னர் பாலி தீவு அருகே கடலடியில் மாயமானது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த கப்பலை கண்டுபிடித்து 53 வீரர்களை மீட்க தீவிர முயற்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தோனேசிய கடற்படை தற்போது நீர்மூழ்கி மீட்க முடியாத அதாவது சுமார் 700 மீட்டர் ஆழத்திற்கு சென்றிருக்கலாம் என கூறியுள்ளது. இந்தோனேசிய கடற்படை செய்தி தொடர்பாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ அளித்த பேட்டி ஒன்றில் நங்காலா 500மீ ஆழம் வரை இயங்க […]

Read More

நொடிக்கு 2 கிலோமீட்டரை கடக்கும் அதிவேக இந்திய ஆயுதம்!!

April 23, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் ஒன்றை தயாரித்து வருகிறது, கடந்த வருடம் நடைபெற்ற சோதனையில் 20 நொடிகளில் சுமார் 40கிமீ தூரத்தை இது கடந்தது. தற்போது இந்த வருடம் நடைபெற உள்ள சோதனையில் நீண்ட நேரம் அதாவது 12 நிமிடங்களுக்கு மாக்-6 வேகத்தில் பறக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதத்தை சுமார் 1500கிமீ தொலைவுக்கு இயங்க வைக்கும் வகையில் நொடிக்கு 2 கிலோமீட்டரை கடக்கும் […]

Read More

இந்த வருடம் ஒய்வு பெறும் முதல் இந்திய கிலோ நீர்மூழ்கி !!

April 23, 2021

இந்த வருடம் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் என்கிற கீலோ ரக நீர்மூழ்கி கப்பல் படையில் இருந்து ஒய்வு பெற உள்ளது, இதற்கான விழா மும்பையில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு துறையின் ஒப்புதலுக்காக இந்திய கடற்படை இரண்டு மாதங்களுக்கு இந்த நிகழ்வை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு இந்திய கடற்படையின் கடலடி போர்முறையில் பல ஆண்டு காலமாக முக்கிய பங்கு வகித்த நீர்மூழ்கி ரகம் ஒய்வு பெறுவதை முன்குறிக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த கப்பல் ஒய்வு பெறும் போது […]

Read More