மாவோயிஸ்டு தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • April 4, 2021
  • Comments Off on மாவோயிஸ்டு தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம்

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 22 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சத்திஸ்கர் காவல் துறை கூறியுள்ளது.

கடந்த சனியன்று இந்த சண்டை நடைபெற்றது.அதில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களின் உடல்கள் சனியன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் தற்போது ஞாயிறு அன்று 17 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த தாக்குதலில் 30 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சண்டை சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்றது.தகவல்படி கிட்டத்தட்ட 400 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படை பிரிவை சேர்ந்த எட்டு வீரர்களும், கோப்ரா படை பிரிவை சேர்ந்த ஏழு வீரர்களும் , சிறப்பு டாஸ்க் படையை சேர்ந்த ஆறு வீரர்களும், சிஆர்பிஎப் படையின் பஸ்தாரியா பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரரும் வீரமரணம் அடைந்துள்ளனர்.