
சத்திஸ்கரின் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் நேற்று நடந்த என்கௌன்டருக்கு பிறகு 21 வீரர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சண்டையில் 24 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் தற்போது பிஜப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரமரணம் அடைந்த ஒரு கோப்ரா கமாண்டோ மற்றும் ஒரு சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.மூன்று பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஒன்பது மாவோயிஸ்டுகளும் இந்த தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.