Day: April 21, 2021

இந்தியாவுக்கான MH-60R ஹெலிகாப்டர்கள் ஜூலையில் டெலிவரி !!

April 21, 2021

இந்தியா தனது கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து போயிங் நிறுவனத்தின் MH 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது. இவற்றில் முதலாவது ஹெலிகாப்டர் நியூயார்க் நகரில் தற்போது சோதனைகளை துவங்கி உள்ளது. முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் ஜூலை மாத இறுதியில் இந்தியா வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் சுமார் 2.4 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் 24 போயிங் எம்.ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியா ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.

Read More

போர் பயிற்சியின் போது இந்தோனேசிய நீர்மூழ்கி மாயம் !!

April 21, 2021

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ நங்காலா எனும் நீர்மூழ்கி பாலி அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. தீடிரென கப்பல் மாயமான நிலையில் இந்தோனேசிய கடற்படை அந்த நீர்மூழ்கி கப்பலை தேடி வருகிறது. ஜெர்மனியின் டைப்209 ரகத்தை சேர்ந்த இது 70களின் இறுதியில் ஜெர்மனியில் கட்டப்பட்டு 80களின் ஆரம்பத்தில் இந்தோனேசிய கடற்படையில் இணைந்தது. இந்தோனேசிய ராணுவம் பல பழைய தளவாடங்களை பயன்படுத்தி வருகிறது அவை அடிக்கடி மோசமான விபத்துகளையும் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தோனேசிய அரசு […]

Read More

அமெரிக்கா சீனாவை போல 5ஜி தொழில்நுட்பம் நோக்கி நகரும் இந்திய ராணுவம் !!

April 21, 2021

இந்திய ராணுவம் அமெரிக்க மற்றும் சீன ராணுவங்களை போல 5ஜி, சுயசிந்தனை தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் நோக்கி நகர முடிவு செய்துள்ளது. இந்திய ராணுவம் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய தொழில்நுட்பங்கள் நோக்கி நகர உள்ளது, இதற்கு தேவையான உதவிகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்யும் என பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் கூறியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் இத்தகயை தொழில்நுட்பங்களில் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு […]

Read More

நைஜீரிய ராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி !!

April 21, 2021

இந்திய தரைப்படையை சேர்ந்த நால்வர் குழு ஒன்று நைஜீரியா நாட்டில் தங்கியிருந்து மூன்று மாதங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி அளித்து உள்ளனர். அவர்கள் நைஜீரிய காலாட்படை மற்றும் சிறப்பு படைகளுக்கு கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு ஆகிய போர்முறைகளில் பயிற்சி அளித்து உள்ளனர். மேலும் அவர்கள கெரில்லா போர்முறை மற்றும் சிறு குழு நடவடிக்கைகள் குறித்தும் நைஜீரிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளனர். 200 நைஜீரிய வீரர்கள் கடந்த ஜனவரி 22 முதல் ஏப்ரல் 18 வரை […]

Read More

என்.பி.5 விமானம் சோதனை ஓட்டத்திற்கு தயார் !!

April 21, 2021

இலகுரக தேஜாஸ் என்.பி.5 விமானம் முதலாவது சோதனை ஒட்டத்திற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானமானது கடற்படை இரட்டை என்ஜின் விமானத்தின் தொழில்நுட்பங்களை சோதிக்க பயன்படும் என்பது கூடுதல் தகவல். என்.பி-1, என்.பி-2 மற்றும் என்.பி-5 ஆகிய விமானங்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே என்.பி-1, என்.பி-2 ஆகிய விமானங்கள் ஏற்கனவே 18 முறை பறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க கடற்படைக்கான பயிற்சி […]

Read More

வருகிறது புதிய சக்திவாயந்த பிரம்மாஸ் எக்ஸ் !!

April 21, 2021

இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டு தயாரிப்பில் வந்த பிரம்மாஸ் ஏவுகணையின் மற்றொரு புதிய வடிவம் வெளிவர உள்ளது. இந்த ஏவுகணை பிரம்மாஸ் எக்ஸ் என அழைக்கப்படுகிறது, இது 4.5 மாக் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன் தாக்குதல் வரம்பு பற்றிய தகவல்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை அது மட்டும் மர்மமாக உள்ளது. இதனை நியர் ஹைப்பர்சானிக் மிசைல் என அழைக்கின்றனர், பிரம்மாஸ் எக்ஸ் ஏவுகணை அடிப்படை பிரம்மாஸை விட […]

Read More

காலக்கெடுவுக்கு முன்னரே தயாராகும் தைவான் போர் விமானம் !!

April 21, 2021

தைவானுடைய தேசிய சங் ஸான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அடுத்த தலைமுறை போர் விமான திட்டம் வேகமடைந்து உள்ளதாக கூறியுள்ளது. டிசைன் மற்றும் என்ஜின் தயாரிப்பு ஆகிய முதல் இரண்டு கட்ட பணிகளும் 2024ஆம் ஆண்டு நிறைவு பெறும் எனவும், அதே ஆண்டிலேயே மற்ற 24 முக்கிய தொழில்நுட்பங்களுக்கான பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு முறையே 8.8 பில்லியன் மற்றும் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இது தென்கொரியாவின் […]

Read More