தற்பாதுகாப்புக்காக உக்ரைன் அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கலாம் !! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, எல்லையில் ரஷ்யா பல லட்சம் வீரர்களை குவித்துள்ளது. இந்த நிலையில் ஒரு பக்கம் ரஷ்யா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உக்ரைனும் தன்னால் இயன்றதை முயன்று வருகிறது. அந்த வகையில் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக இணைய உக்ரைன் அதி தீவிர முயற்சி செய்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]
Read Moreஇந்திய விமானப்படை தளபதி வருகிற 21ஆம் தேதியன்று ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 6 ரஃபேல் விமானங்களை இந்தியா நோக்கி வழியனுப்பி வைக்கிறார். இந்த 6 விமானங்கள் இந்தியா வருகையில் பல்திறன் போர் விமானங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் அம்பாலா தளம் வந்து அங்கிருந்து ஹஸிமாரா தளம் செல்லும் அங்கு இந்த விமானங்களை கொண்டு இரண்டாவது ரஃபேல் படையணி உயிர்ப்பிக்கப்படும். மேலும் பனாகர் தளத்தில் உள்ள சி-130 படையணி மற்றும் மேற்குறிப்பிட்ட ரஃபேல் […]
Read Moreசர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் ரா மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, காஷ்மீர் விவகாரத்தால் இரண்டு நாடுகளும் மூன்று முறை போரிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஃபெப்ரவரி மாதம் இரு நாடுகளும் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தம் இந்த சந்திப்பின் விளைவாக ஏற்பட்டது என கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையேயான உறவுகள் […]
Read Moreவிமான மேம்பாட்டு முகமையின் பொறியாளர்கள் கடற்படைக்கான புதிய போர் விமானத்தின் மாதிரி வடிவத்தை சோதனை செய்துள்ளனர். டெட்பஃப் எனப்படும் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானமானது 2032 முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள மிக்29-கே போர் விமானங்களுக்கு மாற்றாக அமையும். ஆரம்பத்தில் இரண்டு வடிவங்களை ஏ.டி.ஏ கடற்படைக்கு காண்பித்தது, அதில் கடற்படை தேர்வு செய்த வடிவம் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது தற்போது அதுவே காற்று சுரங்கத்தில் சோதிக்கப்படுகிறது. இந்த விமானமானது ஆம்கா விமானத்தின் பல அம்சங்களை உள்ளடக்கி […]
Read Moreஃபிலிப்பைன்ஸ் அரசு சீன தூதரை நேரில் வரவழைத்து விட்சுன் ரீஃப் பிரச்சினைக்காக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் விட்சுன் ரீஃப் பகுதியில் இருந்து சீனா வெளியேற தனது அரசுக்கு அழுத்தம் கொடுக்கமாறும் ஃபிலிப்பைன்ஸ் அரசு சீன தூதரிடம் கூறியுள்ளது. சீன தூதர் ஹூ சிலியானை நேரடியாக அழைத்து ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு துறை இணை செயலர் எலிசபெத் புவன்சுகேசோ ஜூவான் ஃபிலிப்பே ரீஃப் (விட்சுன் ரீஃப் சீனா வைத்த பெயர்) பகுதியில் இருந்து சீன கலன்கள் வெளியேறும்படி கூறியுள்ளார். […]
Read Moreஇந்தியா ஆப்கானிஸ்தான் நிலையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அமெரிக்காவின் படைவிலக்கத்துக்கு பின்னர் அங்கு ஏற்படும் வெற்றிடம் பற்றிய சிந்தனை இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியா இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நிலையில் அந்த வெற்றிடத்தை விரும்பத்தகாத சக்திகள் நிரப்பி விடக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் பேசுகையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கு தேவையான எந்தவித உதவியையும் இந்தியா செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். ஆஃப்கானிஸ்தான் நிலையை ஈரான் அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எது […]
Read Moreசீனாவை எதிர்கொள்ளும் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி வேறு எந்த நாடும் இல்லை என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. ராணுவ ரீதியாகவும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி இந்தியாவின் மனிதவளம் மற்றும் ராணுவ பலம் ஆகியவை இன்றியமையாதது என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக குறிப்பாக மென்பொருள் துறையில் இந்தியாவின் கை மேலோங்கி உள்ளது இது அமெரிக்கா இந்தியாவை அதிகம் சார்ந்து இருக்க வழிவகை செய்கிறது. இத்தகைய நிலை அமெரிக்கா […]
Read More