48 மணி நேரத்திற்குள் 12 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள வீரர்கள்

  • Tamil Defense
  • April 11, 2021
  • Comments Off on 48 மணி நேரத்திற்குள் 12 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள வீரர்கள்

கடந்த 48மணி நேரத்திற்குள்ளாகவே கிட்டத்தட்ட 12 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.பிராந்திய இராணுவ வீரரான முகமது சலீம் அவர்களின் மரணத்திற்கும் வீரர்கள் பழி தீர்த்துள்ளனர்.அதாவது அனந்தநாக்கில் நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

தவிர காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படைகள் நடத்திய ஆபரேசனில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததால் வீரர்கள் தங்கள் பணியை முடித்துள்ளனர்.

இதற்கு முன் காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கௌன்டரில் ஏழு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.