
சத்திஸ்கரில் சனியன்று நடைபெற்ற மோதலில் கிட்டத்தட்ட 12 நக்சல்களை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.மேலும் 16 நக்சல்கள் காயத்துடன் தப்பியுள்ளனர்.
சத்திஸ்கரில் சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.தகவல்படி கிட்டத்தட்ட 400 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ்தர் ரேஞ்ச் ஐஜி சுந்தராஜ் பட்டிலிங்கம் அவர்கள் கூறுகையில் சண்டையில் 12 நக்சல்கள் வீழ்த்தப்பட்டதாகவும் 16 பேர் படுகாயமுற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாவோயிஸ்டு கமாண்டர் ஹிட்மா என்பவனை தேடும் முயற்சியின் போது தான் இந்த என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.