Day: April 12, 2021

வடகொரியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கிறதா ??

April 12, 2021

வட கொரியா அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டி வருவதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகியவை சந்தேகிக்கின்றன. அமெரிக்க மற்றும் தென் கொரிய உளவு அமைப்புகள் வடகொரியா சுமார் 3000 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பலை 2019ஆம் ஆண்டு கட்டி முடித்துள்ளதாக நம்புகின்றன. அதை போல கடந்த வருடம் வட கொரிய தலைநகரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் ஏவுகணை காட்சிபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான அடுத்தகட்ட […]

Read More

இந்திய தரைப்படைக்கு அதிவேக ரோந்து படகுகள் காரணம் ??

April 12, 2021

இந்திய தரைப்படைக்கு 12 புதிய அதிவேக ரோந்து படகுகளை வாங்க முடிவ செய்யப்பட்டு உள்ளது. இந்த படகுகளில் 12.7 மில்லிமீட்டர் இயந்திர துப்பாக்கிகள் முன்புறம் மற்றும் பின்புறம் இருக்கும். மேலும் இவற்றில் சுமார் 30 முதலாக 35 வீரர்கள் வரை பயணிக்க முடியும் என தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் முதல் லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியில் இவை சீன படைகளுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபடலாம் என தெரிகிறது.

Read More

இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை விற்க ரஷ்யா விருப்பம் !!

April 12, 2021

ரஷ்யாவை சேர்ந்த பிரபல நீர்மூழ்கி கப்பல் வடிவமைப்பு நிறுவனமான ரூபின் டிசைன் பியூரு இந்தியாவுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது. பாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் பாதி கப்பல் மற்றும் பாதி நீர்மூழ்கி கப்பலாகும் இரண்டின் தன்மையையும் ஒருசேர பெற்றிருக்கும். இது 1000 டன்கள் எடை, 60 முதல் 70 மீட்டர் நீளமும், 42 வீரர்களும் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆளில்லா விமானம், நீரடிகணைகள், சிறிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், […]

Read More

ஈரானிய அணு உலையை தாக்கிய இஸ்ரேல் ??

April 12, 2021

நேற்று ஈரானுடைய முக்கிய அணு உலையான நதான்ஸ் நிலத்தடி அணு உலையை இஸ்ரேல் தாக்கி உள்ளது. இந்த அணு உலையின் மின்சார க்ரிட்டை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரான் உயிர் சேதமோ பெருமளவில் பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும், இது ஈரானின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத பயங்கரவாத சக்திகளின் செயல் எனவும் கூறியுள்ளது. ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதல் அணு உலையின் மின்சார அமைப்பை முற்றிலும் அழித்துள்ளதாகவும் […]

Read More

சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க கடற்படை; என்ன நடக்கிறது அங்கு..?

April 12, 2021

‘நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ‘: அதிகரித்து வரும் பதட்டத்தின் மத்தியில் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்க கடற்படை அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்களுக்கும் சீன கடற்படைக்கும் இடையில் அண்மையில் கடலில் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனக் கடற்படையின் லயோனிங் போர்க்கப்பல்கள் குழுவை ஒட்டியவாறு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட கப்பலான USS Mustin, சென்ற புகைப்படத்தை கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க கடற்படை வெளியிட்டது.இது சீனர்களுக்கு அமெரிக்கா விடும் எச்சரிக்கையாக […]

Read More

தனது விமானப்படையை மேம்படுத்த இந்திய உதவியை நாடும் மத்திய ஆசிய நாடு !!

April 12, 2021

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் தனது விமானப்படையை நவீனபடுத்த இந்திய உதவியை நாடி உள்ளது, அந்நாட்டு விமானப்படை விமானங்கள் ரஷ்ய அல்லது சோவியத் தயாரிப்புகள் ஆகும். இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜெனரல் நுர்லான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கஜகஸ்தான் தனது விமானப்படையில் உள்ள மி17 ரக ஹெலிகாப்டர்களை நவீனபடுத்த பெல் மற்றும் ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கருவிகள் பெற விரும்புகிறது. […]

Read More

சீன எல்லைக்கு மலையக தாக்கும் பிரிவை அனுப்பும் இந்தியா

April 12, 2021

இந்திய-திபத் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு மலையக தாக்கும் படையின் 10000 வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையக பகுதிகளில் தீரமுடன் போர் செய்யும் பயிற்சி பெற்ற இந்த படையினர் சீனாவுக்கென்றெ பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரிவு ஆகும்.மேலும் சீன எல்லைப்பகுதி பெரும்பாலும் மலைசார் பகுதிகளாக இருப்பதால் இந்த படைப் பிரிவை இந்தியா எல்லைக்கு அனுப்ப உள்ளது. கடந்த ஆண்டு முதலே இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.போர் அளவுக்கு சென்ற இந்த மோதல் […]

Read More