Breaking News

Day: April 10, 2021

விக்ராந்திற்கு தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு !!

April 10, 2021

இந்தியா சொந்தமாக கட்டி வரும் விமானந்தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு நிறாவப்பட உள்ளது. இதற்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட உள்ளது, இதன் தாக்குதல் வரம்பு 70கிமீ ஆகும். அதை போலவே செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணையும் இதில் நிறுவப்பட உள்ளது, இதனுடைய தாக்குதல் வரம்பு 40 […]

Read More

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு யாருடையை ஆலோசனையும் தேவையில்லை !!

April 10, 2021

நேற்று ஜம்முவில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட கூடாது. நாகரிகம் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய எந்தவொரு நாடும் இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும், அந்த வகையில் எங்கள் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிட வேண்டாம், அதை சீர்செய்ய எங்களுக்கு திறன் உண்டு என்றார்.

Read More

இந்திய பகுதிக்குள் அனுமதி இன்றி பயணித்த அமெரிக்க கடற்படை !!

April 10, 2021

இந்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க கடற்படையின் 7ஆவது கடற்படை படையணி இந்திய பகுதிக்குள் அனுமதி இன்றி பயணித்துள்ளது. லட்சத்தீவுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, இது இந்தியாவின் கடல்சார் கொள்கைகளுக்கு முரணானது. அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஜாண் பால் ஜோன்ஸ் லட்சத்தீவுகளுக்கு அருகே 130கடல் மைல்கள் தொலைவில் பயணித்துள்ளது.. சர்வதேச சட்ட விதிகளின்படி இந்தியாவிடம் முன்னரே முறையான அனுமதி பெற்று அமெரிக்க கடற்படை இந்த பயிற்சியை செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அன்சார் பயங்கரவாத இயக்கத்தை வேரோடு சாய்த்த வீரர்கள்

April 10, 2021

கடந்த 24மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் இந்திய ஆயுதப்படைகள் ஆபத்தான பயங்கரவாத குழு அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஐ முற்றிலுமாக அழித்துள்ளன. ஷோபியனில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய என்கௌன்டர் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.இதில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இரண்டாவது நடவடிக்கையில் AGuH இன் தலைவர் இம்தியாஸ் ஷா உட்பட இரண்டு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை இராணுவ வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.ஏழு ஏகே ரக துப்பாக்கிகள் […]

Read More