Day: April 3, 2021

9 நக்சல்களை வீழ்த்திய பாதுகாப்பு படை

April 3, 2021

சத்திஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 250 நக்சல்கள் நமது வீரர்களை தாக்கியுள்ளனர்.இந்த ஆபரேசனில் 30 கோப்ரா வீரர்களும்,60 மாவட்ட ரிசர்வ் படையினரும் ,120 சிஆர்பிஎப் வீரர்களும் கலந்துள்ளனர்.ஒன்பது நக்சல்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்திஸ்கரின் பிஜப்பூரில் டாரேம் எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது. ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை சத்திஸ்கரின் […]

Read More

அதிர்ச்சி; ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

April 3, 2021

சத்திஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சத்திஸ்கரின் பிஜப்பூரில் டாரேம் எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை சத்திஸ்கரின் டிஜிபி அஸ்வதி அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

தேஜஸ் விமானம் வாங்க உள்ளதா மலேசியா ?

April 3, 2021

தேஜாஸ் விமானத்தை சோதிக்க இந்தியா வரும் மலேசிய குழு !! இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நாடுகளுக்கு தேஜாஸ் போர் விமானத்தை விற்பனை செய்ய இந்தியா முயன்று வருகிறது. இந்த நிலையில் மலேசிய விமானப்படை குழு தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய இந்தியா வர உள்ளது. பெங்களூரு நகரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்த சோதனைகள் நடைபெற உள்ளது. மலேசிய விமானப்படைக்கு […]

Read More

சீனாவுக்கு எதிராக புதிய மலையக பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் தரைப்படை !!

April 3, 2021

புதிய பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் தரைப்படை !! இந்திய தரைப்படை லாரியில் இணைத்து பயன்படுத்தும் வகையிலான பிரங்கிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது இதனை உறுதிபடுத்தும் வகையில் இவ்வகை பிரங்கிகளுக்கான தகவல் அறியும் கோரிக்கையை விடுத்துள்ளது. 155மிமீ/52 காலிபர் திறன் கொண்டதாகவும், சமவெளி,மலைகள், அதிக உயர் பகுதிகள், பாலைவனங்கள், வறண்ட பகுதிகள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும், மேலும் இவ்வகை பிரங்கிகள் தற்போது தரைப்படை பயன்படுத்தி வரும் அனைத்து வகை […]

Read More

அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் தைவான் !!

April 3, 2021

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை தைவான் விமானப்படை வாங்க உள்ளதா அறிவித்துள்ளது. எதிரிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தைவான் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீன விமானப்படை தொடர்ந்து தைவான் நாட்டின் எல்லைக்குள் வான் பாதுகாப்பு அடையாள பகுதிகளுக்குள் அடிக்கடி அத்துமீறுவதும் குறிப்பிடத்தக்கது. பேட்ரியாட் அமைப்பின் அதிநவீன ரகமான பேட்ரியாட்-3 அமைப்பை வாங்க உள்ளதாகவும் ஆனால் எத்தனை அமைப்புகள் வாங்கப்படும் என்பது பற்றிய தகவல் […]

Read More

முதல் தொகுதி பெண் ராணுவ வீரர்கள் இறுதிகட்ட பயிற்சியில் !!

April 3, 2021

இந்திய தரைப்படையின் காவல்துறை படைப்பிரிவில் முதல்கட்டமாக சுமார் 100 பெண்கள் ராணுவ வீரர்களாக தேர்வாகினர். பெங்களூருவில் உள்ள தரைப்படை காவல்துறை ரெஜிமென்ட்டல் சென்டரில் அவர்கள் தங்களது 61 வார கால பயிற்சியில் உள்ளனர். தற்போது இறுதிகட்ட பயிற்சிகளில் உள்ள அவர்கள் வருகிற மே மாதம் லான்ஸ் நாயக் அந்தஸ்தில் படையில் இணைய உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

புல்வாமா என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

April 3, 2021

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் காக்போரா பகுதியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் மூன்று தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். வீழ்த்தப்பட்டவர்கள் சுஹைல் நிசார் லோன், யவர் அஹ்மத் வாணி, புல்வாமாவின் க்ரூவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்; மற்றும் புல்வாமாவின் ப்ரிச்சூவைச் சேர்ந்த ஜுனைத் அஹ்மத் நெங்க்ரூ என்ற பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான். இதில் இரு பயங்கரவாதிகள் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தையும் ஒருவன் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தையும் சேர்ந்தவன் ஆவான். நேற்றிரவு இராணுவத்தின் 55RR, JK காவல்துறையின் […]

Read More