பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1889ஆம் ஆண்டு ராணுவத்தின் தேவைகளுக்காக ராணுவ பண்ணைகள் தோற்றுவிக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த போது சுமார் நூற்றுக்கணக்கான பண்ணைகள் இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 32 பண்ணைகள் மட்டுமே உள்ளன. தற்போது இந்த 32 பண்ணைகள் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளன, அவை அம்பாலா, ஶ்ரீநகர், ஆக்ரா, கொல்கத்தா, பதான்கோட், லக்னோ, மீரட், அலகாபாத், லக்னோ ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த பண்ணைகளில் 20,000 கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வந்தன, இந்த பண்ணைகளில் […]
Read Moreசமீபத்தில் இத்தாலிய சிறப்பு காவல்படையான கரிபயானாரி முக்கிய தகவல்களை கசிய விட்ட ஒரு இத்தாலிய கடற்படை அதிகாரியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் இத்தாலிய கடற்படையின் கேப்டன் ஆவார் இவர்ஒரு ஃப்ரிகேட் ரக கப்பலை வழிநடத்தியவர் ஆவார். இவர் இத்தாலிய கூட்டு படைகள் தலைமை தளபதியின் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் ஆகையால் உயர் ராணுவ ரகசியங்கள் பலவற்றை பற்றி அறிந்தவராக இருந்தார். ரஷ்ய உளவாளிகள் இவரிடம் பணம் கொடுத்து முக்கிய ஆவனங்களை பரிமாறும் போது கையும் களவுமாக […]
Read Moreகான்பூரில் உள்ள Defence Materials and Stores Research and Development Establishment என்றடி.ஆர்.டி.ஓ ஆய்வகம் 9.0 கிலோ எடையுள்ள லைட் வெயிட் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை (பிபிஜே) உருவாக்கியுள்ளது. ஃப்ரண்ட் ஹார்ட் ஆர்மர் பேனல் (FHAP) ஜாக்கெட் சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TBRL) சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு கிராம் எடை குறைப்பும் சிப்பாயின் வசதியை அதிகரிப்பதில் முக்கியமானது ஆகும். இந்த தொழில்நுட்பம் நடுத்தர அளவிலான ஆடையின் […]
Read Moreசமீபத்தில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் சூஹ் வோக் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார், இங்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு இலகுரக டாங்கி தயாரிக்க உதவ தென்கொரியா விரும்புவதாக குறிப்பிட்டார். K9 வஜ்ராவை தயாரித்த ஹான்வஹா நிறுவனம் K21 எனும் இலகுரக டாங்கியை தயாரித்துள்ளது. இந்தியா சீன எல்லையோரம் பயன்படுத்த இலகுரக டாங்கிகளை தேடி வருகிறது, K9 வஜ்ரா சேஸில் 120மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தி பயன்படுத்தும் […]
Read Moreஇந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பயிற்சிகளில் இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை தாங்கிய சுகோய்30 போர் விமானங்களும் பங்கேற்றன. இந்த வகை விமானங்களின் பங்கேற்பு அவை முழு அளவில் ஒரு கடல்சார் தாக்குதல் பணிக்கு தயாராக உள்ளதை எடுத்து காட்டுகிறது. இந்த விமானங்கள் மலாக்கா ஜலசந்தி, தெற்கு மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக போய் தாக்குதல் நடத்த வல்லவை […]
Read Moreசமீபத்தில் சீன வெளியுறவு துறை அமைச்சக செயலாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் பேசும்போது பாகிஸ்தானுடன் இணைந்து பிராந்திய அமைதி மற்றும் நலனுக்காக இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகவும், சீனா பாகிஸ்தான் உடனான உறவை பெரிதும் மதிக்கிறது மேலும் இருதரப்பும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Read Moreஇந்தியா கடந்த 1974ஆம் ஆண்டு ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் நடத்திய அணு ஆயுத சோதனையில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு நிகரான அணுகுண்டை சோதித்தது. இதனையடுத்து இந்தியா அன்றில் இருந்து அணு ஆயுதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது. பின்னர் ஆபரேஷன் ஷக்தி அணு ஆயுத சோதனை மூலமாக இந்தியா ஒரு முழு அணு ஆயுத நாடாக உலக அரங்கில் பெயர் பெற்றது. இன்று 25 கிலோடன்கள் முதலாக 300 கிலோடன்கள் வரையிலான அணு […]
Read Moreகடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா அக்னி-5 ஏவுகணையை முதன் முதலாக ஏவி சோதனை நடத்தியது, 5000 கிலோமீட்டர் செல்லும் என இந்தியா சொல்லி கொண்டாலும் உண்மையான தாக்குதல் வரம்பு 8000 கிலோமீட்டர் என கூறப்படுகிறது. முதல் சோதனைக்கு பிறகான காலகட்டத்தில் பல்வேறு மேம்பாடுகளை அடுத்து சுமார் 7 முறை அக்னி-5 சோதனை நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கே4 மற்றும் கே15 ஆகிய […]
Read More