
சேவை எண் : IC 38662
பிறப்பு : மே 15, 1959
சேவை : இராணுவம்
தரம் : கலோனல்
பிரிவு : 2வது இராஜபுதன ரைபிள்ஸ்
ரெஜிமென்ட் :இராஜபுதன ரைபிள்ஸ்
போர்: 1999 கார்கில் போர்
விருது: வீர் சக்ரா
வீரமரணம் : ஏப்ரல் 08, 2018
கலோனல் MB ரவீந்திரநாத் கர்நாடக மாநிலத்தின் தவாகிரே மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.15 மே 1959ல் பசப்பா-சரோஜம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.ஓய்வுபெற்ற ஆசிரியரான பசப்பாவிற்கு தனது மகனை எங்கு அனுப்ப வேண்டும் என தெரிந்திருக்கிறது.விஜயபுராவில் உள்ள சைனிக் பள்ளியில் தனது கல்விபடிப்பை தொடங்கினார்.அதன் பிறகு 1976 ல் தேசிய பாதுகாப்பு அகாடமியிலும்,1980ல் இந்தியன் மிலிட்டரி அகாடமியிலும் பயிற்சி முடித்தார்.பயிற்சி முடித்த பின் வீரம் மற்றும் தைரியத்திற்காக பெரிதும் பேசப்படும் இராஜபுதன ரைபிள்சில் இணைந்தார்.
இளவயது லெப்டினன்டாக ரவீந்தர்நாத் அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிந்தார்.பின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் மிலிட்டரி பயிற்சி பள்ளியில் பயிற்றுவிற்பவராக இணைந்தார்.ஐந்து வருடங்களுக்கு பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 1986-87ல் காஷ்மீருக்கு சென்றார்.கார்கில் போர் தொடங்கும் முன்னரே கலோனலுக்கு காஷ்மீரில் பணிபுரிந்த அனுபவம் நிறைய இருந்தது.
விஜய் நடவடிக்கை : கார்கில் போர் (ஜீன் 1999)
போரில் போது கார்கில் செக்டாரில் நிலை கொண்டிருந்த 2வது இராஜபுதன ரைபிள்சிற்கு தலைமை தாங்கினார்.கார்கில் போரில் முக்கியமாக கருதப்பட்ட டோலோலிங்,பாயிண்ட் 4590 மற்றும் கரும்பாறை ஆகிய மலைப் பகுதிகளை மீட்கும் பொறுப்பு இந்த படைக்கு வந்து சேர்ந்தது.ஸ்ரீநகர்-லே முக்கிய சாலையில் இவைகள் அமைந்திருந்ததால் இவற்றை மீட்கும் பொறுப்பு மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது.எதிரியின் சிறிய ரக ஆயுதங்கள் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் தாமே முன் வந்து கண்காணிப்பு குழு படையை முன்னின்று வழிநடத்தினார்.தாக்குதலன்று ஜீன் 12,1999 , டோலோலிங்கின் மேல் எதிரி தொடரச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தினார்கள்.கலோனல் நிலைமையை புரிந்து கொண்டு டோலோலிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.அவரது மிகச் சிறப்பான நடவடிக்கைகளால் தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதல் நடத்தப்பட்டு டோலோலிங் மற்றும் பாயிண்ட் 4590 நமது வீரர்களால் கைப்பற்றப்பட்டது.
கிட்டத்தட்ட 19 வருடங்கள் படையில் பணியாற்றிய கலோனல் அவரது படை வீரர்களின் ஹீரோ தான்.கார்கில் போரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று பல சமூக பணிகளை ஆற்றினார்.கடந்த ஏப்ரல் 2018ல் பெங்களூரில் தனது வீட்டருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.பெரிய ஆரவாரம் இல்லாமல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
போரில் ஒரு வீரரின் பலம் மற்றும் பலவீனம் அவரை வழிநடத்தும் அதிகாரிக்கே தெரியும்.இந்த காரணத்தால் அதிகாரி திடத்துடன் இருப்பது அவசியம்.தனது வீரர்களின் நாயகனாகவே கலோனல் கடைசி வரை வாழ்ந்தார்.தேசத்தை நோக்கிய அவரது நேசம் மற்றும் அதைக் காக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்திற்கு தலை வணங்குவோம்.