உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள்.!

  • Tamil Defense
  • March 29, 2021
  • Comments Off on உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள்.!

இரகசிய இராணுவங்கள் தான் இந்த உளவு நிறுவனங்கள்.தேசிய பாதுகாப்பு ,பாதுகாப்பு துறை ,வெளியுறவு கொள்கை ஆகியவை செயல்பட தேவையான மிக முக்கியமான
அரசின் கீழ் இயங்கும் பிரிவு தான் உளவு நிறுவனங்கள்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என தனது கிளையை பரப்பி தன் நாட்டிற்கு எதிராக ஏதாவது சதி நடக்கிறதா ? அல்லது அப்படி நடக்கும் பட்சத்தில் எவ்வாறு அழிப்பது போன்ற உளவு தகவல்களை சேகரித்து செயல்படுத்துவது தான் உளவு நிறுவனங்களின் பிரதான பணி.அதற்காக அவர்கள் பல்வேறு விசயங்களை கடைபிடிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக நேரடியாக மனிதன் உதவியுடன் உளவு பார்த்து கண்டறிவது, மின்னனு மற்றும் செயற்கைகோள் உதவியுடன் உளவறிவது,எதிரி நாட்டின் பாதுகாப்பான தொலைத் தொடர்புகளை இடைமறித்து கேட்பது என லிஸ்ட் தொடர்கிறது.

1.முக்கியமான பிரச்சனைகள் குறித்து முன்னமே அரசிற்கு தகவல் வழங்குவது.

2.இராணுவத்திற்கு தேவையான உளவு தகவல்களை வழங்குவது.

3.முக்கியமாக இரகசியங்களை இரகசியங்களாகவே பராமரித்தல்.

4.நாட்டிற்கு எதிராக நடக்கும் விசயங்களை கண்காணித்து தடுத்தல்.

5.எதிரி நாடுகள் நம்மை உளவு பார்க்காமல் தடுத்தல் என்பவை உளவு நிறுவனத்தின் முக்கிய பணிகள் ஆகும்.

சில முக்கிய உளவுத்துறைகுறித்து காணலாம்..

சிஐஏ-அமெரிக்கா

சென்ட்ரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி எனப்படும சிஐஏ தான் உலகின் சிறந்த உளவுத்துறையாக பார்க்கப்படுகிறது.உலகன் முழுதும் தனது உளவு வலைப் பின்னலை சிஐஏ ஏற்படுத்து பல ஆபரேசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

1947ல் தொடங்கப்பட்ட இந்த பிரிவின் பட்ஜெட் மட்டுமே 15 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.

FSB-இரஷ்யா

பெடரல் செக்யூரிட்டி சர்விஸ் எனப்படும் இந்த அமைப்பு தான் இரஷ்யாவின் பிரதான உளவு அமைப்பு ஆகும்.இதற்கு முன் கேஜிபி என அழைக்கப்பட்டது.சோவியத் இரஷ்யா பிரிவுக்கு பின் எஸ் எஸ் பி ஆனது.இதற்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது என்பது இரகசியமாகவே உள்ளது.கேஜிபி உலகில் தலைசிறந்த உளவு நிறுவனமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Central External Liaison Department- சீனா

சீனாவின் கம்யூனிச ஆட்சியை உயிர்புடன் வைத்திருக்க உதவும் சக்தியாக சீன உளவுத்துறை விளங்குகிறது.1951ல் தொடங்கப்பட்ட இந்த உளவுத்துறையின் ஆபரேசன்கள் அனைத்தும் இரகசியம் தான்.

Directorate-General for External Security-பிரான்ஸ்

1982ல் தொடங்கப்பட்ட இந்த DGES தான் பிரான்சின் பிரதான உளவு நிறுவனம்.பல ஆபரேசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த உளவு நிறுவனம் உலகின் சிறந்த உளவு நிறுவனமாக பார்க்கப்படுகிறது.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.

MI6-இங்கிலாந்து

இங்கிலாந்தின் பிரதான உளவு நிறுவனமாக MI6 உள்ளது.1909 ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல ஆபரேசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.இதன் பட்ஜெட் 3 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

மொசாத்-இஸ்ரேல்

மொசாத் பெயரை கேள்விப்படாதவர்கள் மிக குறைவே.உலகம் முழுதும் அதிரடி ஆபரேசன்கள் மேற்கொள்வதிலும் வித்தியாசமான முறையில் ஆபரேசன்களை நடத்துவதிலும் ஆகச் சிறந்தவர்கள்.இஸ்ரேலுக்கு எதிராக யார் யோசித்தாலும் அவர்களை போட்டுத் தள்ளிவிட்டு தான் மறுவேலை.1949ல் தொடங்கப்பட்ட இந்த உளவு நிறுவனத்திற்கு 2.73 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுகிறது.

ரா- இந்தியா

இந்தியாவின் வெளிவிவகார உளவுத்துறையாக ரா செயல்படுகிறது.”ரா” வின் அனைத்து செயல்பாடுகளும் பரம ரகசியம்.”ரா” எந்த ஆபரேசனிலும் தோல்வியை சந்தித்தது இல்லை.அனைத்துமே இரகசியமாக தான் வைக்கப்பட்டுள்ளது.”ரா” வின் ஆபரேசன்களை மட்டுமே தனியாக கவனத்துக்கொள்ள பாக் தனியாக ஒரு உளவுப் பிரிவையை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐ-பாகிஸ்தான்

1948ல் தொடங்கப்பட்டது ஐஎஸ்ஐ.இதன் முழு நேரப் பணியே இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவது தான்.தவிர ஆப்கன் போரில் அமெரிக்காவிற்கு உதவி செய்தது.நிறைய வெற்றிகரமான ஆபரேசன்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.எடுத்துக்காட்டாக மும்பை தாக்குதலை குறிப்பிடலாம்.