உலகின் முதல் சூப்பர்சானிக் ட்ரோன் தயார் !!

  • Tamil Defense
  • March 4, 2021
  • Comments Off on உலகின் முதல் சூப்பர்சானிக் ட்ரோன் தயார் !!

தற்போதைய நவீன காலத்தில் மற்ற விஷயங்களை போல போர்முறைகளும் மாற்றம் கண்டு வருகின்றன, அதில் ட்ரோன் போர்முறை மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

தற்போது அந்த ட்ரோன்களும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றன, அந்த வகையில் உலகின் முதல் சூப்பர்சானிக் ட்ரோன் தயாராகி உள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த கெல்லி ஏரோஸ்பேஸ் நிறுவனம் “ஆரோ” என பெயரிடப்பட்டுள்ள சூப்பர்சானிக் ட்ரோனை தயாரித்துள்ளது.

இந்த ட்ரோன் 16 டன்கள் எடை கொண்டது, 2.1 மாக் வேகத்தில் அதாவது ஒலியை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த ட்ரோன் ஸ்டெல்த் அம்சங்களை உள்ளடக்கியது, மேலும் ட்ரோன்களின் குறைந்த வேகம் மற்றும் பயண வரம்பு பிரச்சினைகள் இதில் இருக்காது.

இந்த வகையான பல ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஏவி ஒரு போர் விமானம் மூலம் கட்டுப்படுத்த முடியும்,

அதே நேரத்தில் தரை கட்டுபாட்டு மையத்தில் இருந்தும் இந்த ட்ரோன்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.