ஏற்கனவே ஃபிலிப்பைன்ஸ் தரைப்படைக்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தற்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படை பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஃபிலிப்பைன்ஸ் கடற்படை தளபதி அட்மிரல் ஜியோவான்னி கார்லோ பகார்டோ சமீபத்தில் அந்நாட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படையின் தேர்வு குழு பிரம்மாஸ் மிகச்சிறந்த கடற்கரையோர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாக அமையும் என தகவல் அளித்து உள்ளதாகவும்,
ஆகவே ஃபிலிப்பைன்ஸ் கடற்படை மாக்3 வேகத்தில் செல்லக்கூடிய பிரம்மாஸ் ஏவுகணைகளை படையில் இணைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான முன்வரைவினை அந்நாட்டு தலைவர்களிடம் கடற்படை சார்பில் சமர்பித்து உள்ளதாகவும் தற்போது அதிபரின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஃபிலிப்பைன்ஸின் பாதுகாப்பிற்கு ஐந்து மிக முக்கியமான பகுதிகளில் பிரம்மாஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்த வேண்டி உள்ளது ஆனால் தற்போது ஒரே ஒரு பேட்டரி தான் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.