உலகின் சில சக்திவாய்ந்த கடற்படைகள் தென்சீன கடல்பகுதியை நோக்கி விரைகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் தான் அவை.
அமெரிக்க கடற்படையுடன் பயிற்சி மேற்கொள்ள ஃபிரான்ஸ் 1 ஃப்ரிகேட் மற்றும் 1 சிறிய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைக்க உள்ளது.
மேலும் இங்கிலாந்து தனது பிரமாண்ட குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைக்க உள்ளது, அந்த படையணியில் நெதர்லாந்து கடற்படை கப்பல்கள் இடம்பெற உள்ளன.
அதை போல ஜெர்மானிய கடற்படை கப்பல் ஒன்று ஜப்பானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ள உள்ளது.
பின்னர் அனைத்து கப்பல்களும் சேர்ந்து தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி உரிமை கோரும் பகுதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளன.
அதாவது கடல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கை இது என கூறப்படுகிறது.