காஷ்மீரின் அவந்திபோராவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • March 11, 2021
  • Comments Off on காஷ்மீரின் அவந்திபோராவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் பயங்கரவாத ஆதரவாளர்கள் பற்றிய ரகசிய தகவல் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்தது.

இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கபட்டது.

இதனை கொண்டு புல்வாமா தாக்குதலை போன்று மிகப்பெரிய தாக்குதலை பாதுகாப்பு படைகள் மீது நடத்த திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

தகுந்த நேரத்தில் எடுக்கபட்ட விரைவான நடவடிக்கையால் மிகப்பெரிய நாசவேலை தடுக்கப்பட்டு உள்ளது.