பனிப்போருக்கு பின் முதல்முறையாக அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரிட்டன் முடிவு !!

பனிப்போர் காலத்திற்கு பிறகு பிரிட்டன் படிப்படியாக தனது அணு ஆயுதங்களை குறைத்தது, அதன் பின்னர் தற்போது முதல் முறையாக அணு ஆயுதங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பனிப்போர் காலத்தில் இங்கிலாந்து சுமார் 500 அணு ஆயுதங்களை வைத்திருந்தது தற்போது 195 அணு ஆயுதங்கள் தான் அவர்களிடம் உள்ளது அதில் 120 தயார் நிலையில் உள்ளன.

வருகிற செவ்வாய் கிழமை இதற்கான அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட உள்ளது ஆனால் எத்தனை அணு ஆயுதங்கள் புதியதாக சேர்க்கப்பட உள்ளன என்பது பற்றிய தகவல் இல்லை.

பிரிட்டனுடைய ஒவ்வொரு அணு ஆயுதத்தின் திறனும் சுமார் 100 கிலோடன்கள் ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதத்தின் திறன் வெறுமனே 15 கிலோடன்கள் தான்.

அதே நேரத்தில் ராணுவ தளவாடங்களின் எண்ணிக்கையை குறைத்து மிகவும் அதிநவீன தளவாடங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பிரதமர் போரிஸ் ஜாண்சன் தலைமையிலான அரசு அடுத்த பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு சுமார் 22 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஒதுக்கீடு செய்ய உள்ளது, இது பனிப்போருக்கு பிறகான மிகப்பெரிய உயர்வாகும்.