போலி ஆதார் அட்டைகளுடன் இரண்டு சீனர்கள் கைது !!

மேற்குவங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு சீனர்களை கைது செய்தனர்.

அவய்களிடம் சோதனை நடத்திய போது இரண்டு போலி ஆதார் அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டே இந்தியா வந்த நிலையில் தங்களது விசா காலாவதி ஆன நிலையிலும் தொடர்ந்து தங்கி உள்ளனர்.

மேலும் இவர்கள் பாகிஸ்தான் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

பக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செல்லவிருந்த நிலையில் தான் இவர்கள் சிக்கியுள்ளனர்.

தற்போது மேற்குவங்க மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.