
அடுத்த வருடம் இந்தியா மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பிரமாண்ட திட்டத்தை நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செயல்படுத்த உள்ளது.
இதற்காக இந்திய விமானப்படையின் போர் விமானிகள் நால்வர் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து இவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
தற்போது இவர்களின் பயிற்சி நிறைவு பெற்றதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மோஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதற்கான கூட்டத்தில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா மற்றும் ராஸ்காஸ்மோஸ் தலைவர் டிமித்ரி ரோகோசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.