2021க்கான உலகின் முதல் 8 பெரிய விமானப்படைகளின் பட்டியல் வெளியானது !!

  • Tamil Defense
  • March 21, 2021
  • Comments Off on 2021க்கான உலகின் முதல் 8 பெரிய விமானப்படைகளின் பட்டியல் வெளியானது !!

ஸ்டேட்டிஸ்டா எனும் இணையதளம் பல்வேறு வகையான தரவுகளை ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான உலகின் எட்டு பெரிய விமானப்படைகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

1) அமெரிக்கா – 13,232 விமானங்களுடன் உலகின் மிகப்பெரிய விமானப்படை ஆக உள்ளது.

2) ரஷ்யா – 4143 விமானங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

3) சீனா – 3,260 விமானங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4) இந்தியா – 2,119 விமானங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

5) தென் கொரியா – 1,581 விமானங்களுடன் ஐந்தாவது பெரிய படையாக உள்ளது.

6) ஜப்பான் – 1,480 போர் விமானங்களை கொண்ட ஆறாவது பெரிய படையாக உள்ளது.

7) பாகிஸ்தான் – 1,364 போர் விமானங்களுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.

8) ஃபிரான்ஸ் – 1,057 போர் விமானங்களுடன் எட்டாம் இடத்தில் உள்ளது.

குறிப்பு: உலகின் மூன்றாவது மற்றும் ஏழாவது பெரிய விமானப்படைகளை கொண்ட சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.