விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் மரணம் !!

  • Tamil Defense
  • March 25, 2021
  • Comments Off on விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் மரணம் !!

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட 7 ராணுவ வீரர்கள்,

இரவு தங்களது ராணுவ முகாம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது கங்காநகர் பகுதி அருகே வாகனம் கட்டுபாட்டை இழந்தது.

அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்த வாகனம் தீப்பற்றி கொண்டது இதில் சுயநினைவு இழந்த மூன்று வீரர்கள் தீயில் சிக்கி இறந்தனர்.

மேலும் நால்வர் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ரஜியாசர் பகுதி காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.