மூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி சில நாட்களில் படையில் இணைய உள்ளது !!
இந்திய கடற்படை தனது படை பலத்தை அதிகரிக்கவும், நவீனமயமாக்கல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டம் செயலில் உள்ளது.
ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ள நிலையில் மூன்றாவது கப்பலும் விரைவில் படையிலா இணைய உள்ளது.
ஐ.என்.எஸ் கரன்ஜ் என பெயர் சூட்டபட்டுள்ள இந்த கப்பல் வரும் 10ஆம் தேதி படையில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.