
தைவான் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி தென்சீன கடல்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் தைவான் சொந்தமாக தயாரித்த நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான அதிநவீன அமைப்புகளை அமெரிக்கா வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
சீனா தைவான் தனக்கு சொந்தமான பகுதி என உரிமை கோருவது மட்டுமின்றி அவ்வப்போது அத்துமீறல்களிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.